ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். நவாசுதீனும் அதற்கு ஒப்புக் கொண்டு இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்திருந்தனர். தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஆலியா கூறியிருப்பதாவது: சில வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் சித்திக் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். என்னையும் கவனித்துக் கொண்டார். நல்ல தந்தையாக, கணவனாக அவர் இருந்தார். அன்பாக இருக்கிறார். அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்தேன். திருமணம் பந்தம் என்பது அற்புதமானது என்பதை அவரும் நானும், உணர்ந்திருக்கிறோம். என்றார்.