ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் தேர்வான திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை, நடிகை பிரியங்கா சோப்ரா, தன் கணவர் நிக் ஜோனஸ் உடன், இணைந்து வெளியிட உள்ளார்.
சர்வதேச திரைப்பட விருதுகளில், மிகச் சிறந்ததாக, ஆஸ்கர் கருதப்படுகிறது. 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு, 23 பிரிவுகளில், இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பு, வரும், 15ம் தேதி, ஆஸ்கர் வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா, தன் கணவரும், அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடன் இணைந்து, டிக்டாக் வலைதளத்தில் ஒரு, வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ஆஸ்கர் விருது இறுதிப் போட்டிக்கு தேர்வான திரைப்படங்களை, கணவருடன் இணைந்து அறிவிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக, டுவிட்டர் வலைதளத்திலும், பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா காரணமாக, ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்., 28லிருந்து, ஏப்., 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.