தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து |
தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் கோலமாவு கோகிலா. 2018ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் கதையில் நாயகியாக சிறப்பான நடிப்பைத் தந்து கலக்கி இருந்தார் நயன்தாரா. நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதனை ரீமேக் செய்ய மற்ற மொழிகளில் முயற்சிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கன்னட ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியில் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கிற்கு குட்லக் ஜெர்ரி எனப் பெயரிடப்பட்டுள்ளது. சித்தார்த் செங்குப்தா இப்படத்தை இயக்குகிறார்.