அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பாலிவுட் நடிகர் அமீர் கான் உச்ச நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர் தோல்வியை தழுவின. தற்போது தமிழில் கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஹிந்தி படம் 'சித்தாரே ஜமீன் பார்'. நாயகியாக ஜெனிலியா நடித்துள்ளார். ஸ்பானிஷில் வெளியான சாம்பியன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இதுவாகும்.
இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 20ம் தேதியன்று திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் பிஸ்னசில் அமீர் கான் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அதன்படி, இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்கள் கடந்த பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடாமல் நேரடியாக யு-டியூப் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாம். இதை பார்க்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்த வேண்டும். இப்படி ஒரு புதிய முயற்சியில் இந்த படத்தை அவர் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.