ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஹேரா பெரி. பிரியதர்ஷன் இயக்கத்தில் 2001ல் முதல் பாகமும், நீரஜ் ஓரா இயக்கத்தில் 2006ல் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்தனர். தற்போது இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்குவதாக சொல்லப்படுகிறது. ஹீரோவான அக்ஷய் குமாரே தயாரிக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து தான் விலகி உள்ளதாக நடிகர் பரேஷ் ராவல் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தயாரிப்பாளரான அக்ஷய் குமார். பதிலுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளரான அக்ஷய் குமாருக்கு இது குறித்து விளக்கம் அளித்து பதில் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் அதை படித்தார்கள் என்றால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் என்றும் சஸ்பென்சாக நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகர் பரேஷ் ராவல். இந்த நிலையில் பரேஷ் ராவலின் வழக்கறிஞர் எதனால் அவர் விலகினார் என்கிற உண்மையை வெளியிட்டுள்ளார்.
அதாவது படத்தின் கதை திரைக்கதை எதுவுமே பரேஷ் ராவலுக்கு சொல்லப்படவில்லை. அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டது தவிர முழுமையான ஒப்பந்தம் எதுவும் பரேஷ் ராவலிடம் போடப்படவில்லை. இது ஒரு பக்கம் இருக்க முதல் இரண்டு பாகங்களையும் தயாரித்தது பிரபல தயாரிப்பாளான சஜித் நாடியத்வாலாவின் குடும்பத்தினர் தான். குறிப்பாக இரண்டாவது பாகத்தை அவரது மருமகனான பிரோஸ் நாடியத்வாலா தயாரித்திருந்தார். ஆனால் இந்த மூன்றாம் பாகத்தை அக்ஷய் குமார் தயாரிப்பாக முடிவானது.
அதனால் பிரோஸ் நாடியத்வாலா பரேஷ் ராவலை அழைத்து இந்த படம் உருவாக ஆரம்பித்தால் பிரச்சனையை சந்திக்கும். அதனால் தயவு செய்து இப்போதே இந்த படத்தில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அதனால் நம் நட்பில் விரிசல் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்தே இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன் என அந்த விளக்க நோட்டீஸில குறிப்பிட்டுள்ளார் பரேஷ் ராவல்.