மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
1984ல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்சித், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மபூஷன் விருதை பெற்றுள்ள இவர், 1999ல் மருத்துவர் ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடைசியாக 'பூல் புலையா 3' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் இணையத்தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மாதுரி தீக்சித் பேசியதாவது: பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. உண்மையில் சினிமா துறையில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.
பாகுபாடு நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம். சம்பளத்தில் கூட பாகுபாடு உள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.