இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
லட்சுமண் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'சாவா'. மராட்டிய மன்னர் சாம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி சரித்திரப் படமாக வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளனர். ஹிந்தியில் மட்டுமே வெளியானதால் வட இந்திய வசூல்தான் இப்படத்திற்கு பிரதானமாக இருந்தது. அதுவே மொத்த வசூல் 650 கோடியைக் கடப்பதற்குக் காரணமாக அமைந்தது. நிகர வசூலாக 500 கோடி வசூலை நெருங்கிவிட்டது.
சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இவ்வளவு வசூலைக் குவித்து பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது. 2025ம் ஆண்டின் முதல் 500 கோடி வசூலைக் கடந்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படங்களில் 'ஸ்திரி 2' படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தது. அந்த ஹிந்திப் படத்தை விடவும் தெலுங்குப் படங்களான 'கல்கி 2898 ஏடி, புஷ்பா 2' ஆகியவை 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்தன.
'ஸ்திரி 2' படத்தின் வசூலை 'சாவா' முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.