யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
பாலிவுட் மும்மூர்த்தி கான் நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளவர் நடிகர் சல்மான் கான். இன்னும் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராக வலம் வரும் இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா நடிகர் சல்மான் கான் குறித்து கூறும்போது, அவர் தவறுகள் செய்வதற்கு பயப்படாதவர் என்று கூறியுள்ளார், ஆனால் அவர் என்ன காரணத்திற்காக அப்படி கூறியுள்ளார் தெரியுமா ?
கடந்த 1989ல் 'மைனே பியார் கியா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சூரஜ் பார்ஜாத்யா. அந்த படத்தில் கதாநாயகனாக சல்மான் கான் நடித்தார். அதற்கு முதல் வருடம் தான் சல்மான்கான் ஒரு படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அது சொல்லிக் கொள்ளும்படியான படமாக இல்லை. அந்த வகையில் சல்மான் கானுக்கும் இந்த படம் தான் முதல் படம். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்தது இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அடுத்து இவர்களது கூட்டணியில் வெளியான 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' படத்தின் வெற்றி பற்றி சொல்லவே தேவையில்லை. அதன் பிறகு 'ஹம் சாத் சாத் ஹைன்' என தொடர்ந்து தனது மூன்று படங்களிலும் சல்மான் கானை வைத்தே இயக்கினார் சூரஜ் பார்ஜாத்யா. இந்த நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து ஒரு படம் பண்ணும் முயற்சியில் இவர் இறங்கியுள்ளார். இந்த படத்திற்கான கதையையும் சல்மான் கானிடம் சொல்லி அவர் சம்மதம் பெற்று விட்டதாகவும் தெரிகிறது.
இத்தனை வருடங்களில் சல்மான் கானிடம் என்ன மாற்றம் தெரிகிறது என்கிற கேள்விக்கு பதில் அளித்துள்ள சூரஜ் பார்ஜாத்யா கூறும்போது, “அவரிடம் பெரிய மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை.. அவருக்கு அப்போதும் ஏசி ஒத்துக் கொள்ளாது. இப்போதும் ஏசி ஒத்துக் கொள்ளாது. அதனால் அவர் பெரும்பாலும் கேரவனில் அமர்வது இல்லை. எல்லோரையும் அவர் சந்திக்கிறார். ஒவ்வொன்றுக்கும் பொறுப்பு இருப்பதாக உணர்கிறார். இன்று அவர் மனதுக்கு சரி என தோன்றும் படங்களை செய்கிறார். அவரிடம் உள்ள முக்கியமான பிளஸ் பாயிண்ட், அவர் தவறுகள் செய்வதற்கு பயப்பட மாட்டார். மைனே பியார் கியா படத்தில் இருந்து இப்போது வரை அது தொடர்கிறது. அதனால்தான் அவர் சல்மான்கானாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.