எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் |

பாலிவுட்டின் சீனியர் ஹீரோவான அமிதாப்பச்சனுக்கு மும்பையின் முக்கிய இடங்களில் சில வீடுகள் உள்ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதியில் அமைந்துள்ள 'டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2021ம் ஆண்டில் 31 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த இடம், தற்போது அது இத்தனை மடங்கு விலை உயர்ந்து விற்கப்பட்டுள்ளது. விசாலாமான மாடி மற்றும் ஆறு கார் பார்க்கிங் கொண்ட இடம் சமீபத்தில் வேறொருவரால் வாங்கப்பட்டு டாகுமென்ட் வேலைகளும் முடிந்துள்ளதாம். 5795 பில்ட்அப் ஏரியா, 5185 கார்ப்பெட் ஏரியாவுடன், 4800 சதுரஅடி மாடி என அமைந்த வீடு, தி அட்லான்டிஸ் என்ற குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் வீடுகளை வாங்குவதையும், பின்னர் விற்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.