சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக 'ஸ்கை போர்ஸ்' என்கிற படம் வரும் ஜனவரி 24ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீப காலமாகவே தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வரும் அக்ஷய் குமார் இந்த படத்தை ரொம்பவே நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த படம் வெளியாவதை முன்னிட்டு இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் அக்ஷய் குமார்.
அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்கு திட்டமிட்டு இருந்தார் அக்ஷய் குமார். அதன்படி சில தினங்களுக்கு முன் அதாவது பிக்பாஸ் பைனல் தினத்தன்று ஷூட்டிங்கிற்காக புறப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கும் வந்தார் அக்ஷய் குமார். ஆனால் சல்மான்கான் வர சற்று தாமதமானதால் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார் அக்ஷய்குமார்.
இதுகுறித்து சல்மான்கான் கூறும்போது, “நான் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. ஆனால் அக்ஷய் குமார் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இன்னும் சில புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் தவிர்க்க முடியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் கிளம்பிவிட்டார்” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.