துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் மகன் அர்ஜுன் கபூர். கடந்த எட்டு வருடங்களாக அவரை விட 12 வயது அதிகமான நடிகை மலாய்கா அரோராவுடன் காதலில் இருந்தார். ஆனால், கடந்த வருடக் கடைசியில் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கு முன்பும் சில காதல்களில் இருந்த அர்ஜுன் கபூர் தற்போது ஒரு இளம் நடிகையைக் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மலாய்காவை பிரிந்ததைப் பற்றி சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் அர்ஜுன் கபூர். அவர்கள் இருவரது பிரிவு பற்றி பாலிவுட் மீடியாக்களில் பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, “உங்களை உண்மையாக மதிப்பவருக்காக உங்களது நேரத்தையும் இருப்பையும் செலவிடுங்கள்,” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பாலிவுட்டில் காதலும், பிரிவும் மிகவும் சர்வ சாதாரணம். ஒருவரைக் காதலித்துவிட்டு, இன்னொருவரை மணந்து கொண்ட பிரபலங்கள்தான் அங்கு அதிகம்.