ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர், ரன்வீர் சிங், அக்ஷய் குமார், தீபிகா படுகோனே, டைகர் ஷெராப், அர்ஜுன் கபூர், ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கம் அகைன்'. ராமாயணக் கதையின் காட்சிகளுடன் இப்படத்தின் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி ரிலீஸாக நவ., 1ல் படம் வெளியாகிறது.
இந்நிலையில் தன்னுடைய கங்குவா படத்தை ஹிந்தியில் புரொமோஷன் செய்ய மும்பையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சூர்யா. ஹிந்தி சிங்கம் படத்தின் ஒரிஜினல் பதிப்பான தமிழில் சூர்யா தான் நடித்திருந்தார். அவரிடத்தில் சிங்கம் அகைன் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சூர்யா, ‛‛சிங்கம் படத்தின் அடுத்த பாகத்தை ஏன் செய்யவில்லை என அஜய் தேவ்கன் என்னிடம் கேட்டார். ஆனால் அது ஹரியிடம் தான் உள்ளது. எனக்கும் ஆசை தான் அதேசமயம் சிங்கத்தை மக்கள் இவ்வளவு தூரம் கொண்டாட அதன் தலைப்பு மற்றும் அந்த படத்தில் உள்ள கம்பீரம் தான். எண்களுக்காக அந்த படத்தை செய்ய விரும்பவில்லை.
மேலும் அவர் கூறும்போது, ‛‛இங்கு சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவருதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. சிம்பாவை நாங்களும் மிகவும் நேசித்தோம். இப்போது சிங்கம் அகைன் படத்தை காண ஆவலாய் உள்ளேன். அதிலும் ராமாயணத்தோடு சிங்கத்தை காண இன்னும் ஆவலாய் இருக்கிறேன். சிங்கம் அகைன் படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.