ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'லிங்கா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் சீனியர் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான சத்ருக்கன் சின்ஹாவின் மகள்தான் சோனாக்ஷி. அவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
சோனாக்ஷிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ளது. 4200 சதுர அடியில் இரண்டு பெரிய பெட்ரூம் கொண்ட, முழுவதும் பர்னிஷ் செய்யப்பட்ட வீடாம். அந்த வீட்டை விற்பதற்கு சோனாக்ஷி முடிவெடுத்துள்ளாராம். அது பற்றிய அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் ரியல் எஸ்டேட்ஸ் கம்பெனி ஒன்று விளம்பரம் வெளியிட்டுள்ளதாம். வீட்டின் விலை 25 கோடி என்கிறார்கள். அந்த வீட்டிலிருந்து பார்த்தால் மஹிம் பீச், பாந்த்ரா-ஒர்லி லின்க் தெரியுமாம். அந்த வீட்டில்தான் சோனாக்ஷி, ஜாகீர் ஆகியோரது திருமணம் நடந்துள்ளது. திருமணமான கொஞ்ச நாட்களிலேயே அந்த வீட்டை அவர்கள் விற்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.