வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் உள்ள பிரபல மியூசியம் கிரெவின். இந்தியத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான ஷாரூக்கானை பெருமைப்படுத்தும் விதத்தில் பிரத்யேகமான தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அப்படி ஒரு பெருமையைப் பெறும் முதல் இந்திய நடிகர் ஷாரூக் என்பது குறிப்பிடத்தக்கது. மெழுகு சிலைகள் அடங்கிய மியூசியம்தான் இந்த கிரெவின். ஷாரூக்கானுக்கு உலகம் முழுவதும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், செக் குடியரசு, தாய்லாந்து, இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஷாரூக்கானின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டில் மட்டும் 'பதான், ஜவான்' என இரண்டு 1000 கோடி படங்களில் நடித்து வசூல் சாதனை புரிந்தவர் ஷாரூக்கான். பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளையும் பெற்றவர் ஷாரூக். அடுத்து, அவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள 77வது லோகார்னா திரைப்பட விழாவில் மதிப்பு மிக்க 'பர்டோ அல்ல கரியரா' விருது வழங்கப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல்.