வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
பிரபல பாலிவுட் இயக்குநர் கமல் சந்திரா இயக்கத்தில், அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'ஹமாரே பாரா'. இந்தப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி சர்ச்சைகள் எழுந்தன.
இந்தத் படத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓர் இஸ்லாமிய உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்து, திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. திரைப்படத்தை ஆராய்ந்த குழுவினர், சர்ச்சைக்குரிய இரண்டு வசனங்களை நீக்கிவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம் என பரிந்துரைத்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட வசனங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த 7ம் தேதி படம் வெளியானது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் படத்திற்கு பிரச்னை உருவானது. இந்த படம் இஸ்லாமிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது எனவும், இதை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் கர்நாடக மாநில சிறுபான்மை அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பரிசீலித்த மாநில அரசு, படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
இதுகுறித்து படத்தில் நடித்துள்ள அன்னு கபூர் கூறியிருப்பதாவது: 'ஹமாரே பாரா படத்தின் எழுத்தாளர் ஓர் இஸ்லாமியர். இந்தப் படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக் கண்டு அவர் மிகவும் வருத்தப்படுகிறார். இந்தப் படத்தில் நடித்த பெண்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. படத்தில் நடித்த நடிகர்களின் வீடுகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் சிலர் வெறுப்பு கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம்" என்றார்.