‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

விஷால் கும்பார் இயக்கத்தில் நடிகை அஞ்சலி பாட்டீல், ஸ்ரீனிவாஸ் போக்லே மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஹிந்தி படம் ‛மல்ஹர்'. ரிஷி சக்சேனா, முகமது சமத் மற்றும் அக்ஷதா ஆச்சார்யா ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபுல்லா பசாத் தயாரித்துள்ளார். டி.சதீஷ் மற்றும் சாரங் குல்கர்னி இசையமைத்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் நடக்கும் மூன்று கதைகளாக ஒவ்வொரு கதையுடனும் ஒரு தொடர்பு இருப்பது போன்று இந்த படம் உருவாகி உள்ளது. காதல் கலந்த குடும்ப படமாக தயாராகி உள்ளது. ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மே 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பிரபுல்லா பசாத் கூறுகையில், ‛‛மல்ஹர் படம் கட்ச் என்ற கிராம பகுதியில் நடக்கும் மூன்று கதைகளின் அற்புதமான சங்கமம் ஆகும். பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு கிடைக்கும் வகையில் படத்தை சுவாரஸ்யமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் இரண்டு சிறந்த நண்பர்களின் கதையைச் சொல்கிறது'' என்றார்.




