பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஹீரோவுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் எல்லோரும் ஒரே விதமாக அவர்களை டீல் செய்வது இல்லை. ரசிகர்களை பொதுவெளியில் பார்க்கும் இடங்களில் கையசைத்து செல்வது, சிலருடன் இணைந்து புகைப்படம், செல்பி எடுத்துக் கொள்வது அல்லது ரசிகர் மன்றம் மூலமாக சிலருக்கு உதவி செய்வது என்கிற அளவிலேயே நின்று கொள்கிறார்கள். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது ரசிகர் ஒருவரின் பிறந்தநாளுக்கு அவரை நேரில் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விலை உயர்ந்த ஷூ ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
அது மட்டுமல்ல அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து அந்த ஷூ லேசை கட்டிவிட்டு உதவியும் செய்துள்ளார். மேலும் தனது அலுவலக வாசலிலேயே அவருக்கு கேக் வெட்டி ஊட்டி விட்டு அவரது பிறந்தநாளை மறக்க முடியாத ஒரு நாளாக மாற்றி உள்ளார் ஜான் ஆபிரகாம்.
அவரது இந்த அன்பு பரிசை பெற்றுக் கொண்ட ரசிகர் அக்சய் கேதாரி என்பவர் இது குறித்து கூறும்போது, ஜான் ஆபிரகாம் தனக்கு பரிசளித்த இந்த இத்தாலியன் ரைடிங் ஷூ ரூ 22500 மதிப்புள்ளது என்றும் தனது பிறந்தநாளில் இந்த விலை உயர்ந்த பரிசை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.