ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் மரகதமணி. தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலியின் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளராக பணியாற்றி வரும், இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்காக ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த இவருடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த வருடம் வெளியான 'சந்திரமுகி 2' படத்திற்கு இசையமைத்த இவர், தற்போது 'ஜென்டில்மேன் 2' படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இன்னொரு பக்கம் பாலிவுட்டில் பிரபல நடிகரும் இயக்குனருமான அனுபம் கெர் இயக்கியுள்ள 'தன்வி தி கிரேட்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் மரகதமணி. தமிழில் எம்.எம் கீரவாணி என்கிற பெயரில் இசையமைக்கும் இவர் ஹிந்தியில் எம்எம் க்ரீம் என்கிற பெயரில் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் அனுபம் கெர் கீரவாணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறும்போது, “எனது அனைத்து கனவுகளும் நனவானது. ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வெற்றியாளர், மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான கீரவாணியுடன் நான் இயக்கும் படத்திற்காக இணைந்து பணியாற்றியதில் பெருமை அடைகிறேன். அவருடைய 'தம் மிலே தில் கிலே' பாடலைக் கேட்டதிலிருந்து அவருடைய ரசிகனாக மாறியவன் நான். 'தன்வி தி கிரேட்' படம் உண்மையிலேயே ஆசிர்வாதங்களை பெற்றுள்ளது. உங்களுடைய திறமைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி.. ஜெய்ஹோ” என்று கூறியுள்ளார் அனுபம் கெர்.