எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான மனோஜ் பாஜ்பாய், தி பேமிலி மேன் வெப் தொடர்கள் மூலம் புகழ்பெற்றவர். அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள வெப் தொடர் 'கில்லர் சூப்'. பிளாக் காமெடி ஜார்னரில் உருவாகி உள்ள இந்த தொடரை ரே, சொஞ்சிரியா போன்ற ஹிந்தி படங்களை இயக்கிய அபிஷேக் சவுபே இயக்கி இருக்கிறார். கொங்கனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர் மற்றும் கனி குஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தொடர் குறித்து மனோஜ் பாஜ்பாய் கூறும்போது : இந்த தொடரில் நான் முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். பொதுவாக இரண்டு வேடங்கள் என்றால் அப்பா-மகன், அண்ணன்-தம்பி இப்படியாகத்தான் இருக்கும் இதில் நான் கணவன், கள்ளக்காதலன் என்ற இரண்டு வேடத்தில் நடிக்கிறேன். பிளாக் காமெடி ஜார்னரில் தொடர் உருவாகி உள்ளது. மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்பங்களை கொண்டது.
இயக்குனர் அபிஷேக் சவுபேயின் திறமையும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் கூட்டணியும், கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் உயிர் கொடுத்த நடித்த நடிகர்களையும் நான் நம்பினேன். கில்லர் சூப் ஒரு கிரைம் திரில்லர் ஆகும், பல்வேறு சாரம்சங்கள் கொண்ட இந்த சூப் அனைவரும் விரும்பி சுவைக்க கூடியதாகும். என்றார்.