பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இந்தியத் திரையுலகத்தின் டாப் நடிகரான ஷாரூக்கான் நடிப்பில் 'டங்கி' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்படம் வெற்றி பெறுவதற்காக ஜம்முவில் கத்ரா என்ற இடத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் ஷாரூக்கான்.
இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'பதான், ஜவான்' படங்களின் வெளியீட்டிற்கு முன்பாகவும் அந்த கோயிலுக்குச் சென்றார் ஷாரூக்கான். தொடர்ந்து 'டங்கி' வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
கோயிலில் தன்னால் பக்தர்களுக்குத் தொந்தரவு வரக் கூடாதென தனது முகத்தை மறைத்துக் கொண்டு அவர் சென்றுள்ளார். போலீசார் பாதுகாப்புடன் ஷாரூக் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
ஒரே ஆண்டில் வெளியாகும் ஷாரூக்கின் மூன்றாவது படம் 'டங்கி'. முந்தைய இரண்டு படங்களைப் போலவே இந்தப் படமும் 1000 கோடியை வசூலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.