ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

மலையாள நடிகை பார்வதி கதைகளுக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர் மனதுக்கு திருப்தி தரும் படங்களில் அவர் நடிக்க தவறுவதில்லை. மேலும் கடந்த சில வருடங்களாக பாலிவுட்டிலும் பயணித்து வரும் பார்வதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள கடக் சிங் என்கிற படம் சமீபத்தில் ஜீ ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அனிருத்தா ராய் சவுத்ரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பார்வதி ஒரு தலைமை செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி கூறும்போது, “ஏற்கனவே மலையாளத்தில் டேக் ஆப் என்கிற படத்தில் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த அனுபவம் இந்த படத்தில் நடிப்பதற்கு ரொம்பவே கை கொடுத்தது. இருந்தாலும் வட மாநிலத்தில் பணி புரியும் கேரளாவை சேர்ந்த பெண்ணாக இந்த படத்தில் நடித்ததால் நிஜத்திலேயே அது போன்று வடமாநிலத்தில் வேலை பார்த்த கேரள செவிலியர்கள் பலரிடம் அவர்கள் வடமாநில பாஷையை பேசும் விதம் குறித்து கேட்டு அறிந்து கொண்டு அதையும் படத்தில் பயன்படுத்தினேன்
அதுமட்டுமல்ல பங்கஜ் திரிபாதியும் நடிப்பில் பல புதிய விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடம் கற்றல் அனுபவமே புதுவிதமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவாக பிரித்து தலைமைப்பொறுப்பை ஒவ்வொருவரிடமும் மாற்றி மாற்றி கொடுத்தார். இந்த அனுபவத்தை வைத்து நிச்சயமாக ஒரு படத்தை இயக்க முடியும்.. அதனால் ஒவ்வொரு நாள் காலையும் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்தபடி படப்படிப்பிற்கு கிளம்பி சென்றேன்” என்று கூறியுள்ளார்.