லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை விவாகரத்து செய்த பின்னர் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ல் கிரண் ராவையும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார் அமீர். அதே சமயம் மற்றவர்களைப் போல அல்லாமல் தனது முன்னாள் மனைவியர் இருவரையும் இப்போதும் சமமாக பாவித்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பொது நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று வருகிறார் அமீர்கான்.
சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டு மும்பை திரும்பிய அமீர்கான் அங்கே நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றுக்கு ஆச்சரியமாக தனது முன்னாள் (முதல்) மனைவி ரீனா தத்தாவையும், தனது மகள் ஐரா கானையும் கூடவே தனது வருங்கால மருமகன் நூபுர் சிகாரேவையும் அழைத்து சென்றார். பலரும் அமீர்கானில் இந்த செயலை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.