லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'அனிமல்'. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சித்தனர்.
ஆனால் இது எதுவும் துளிகூட அனிமல் படத்தின் வசூலில் எதிரொலிக்கவில்லை. இந்த படம் வெளிவந்த 8 நாட்களில் உலகளவில் ரூ.600.67 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், பதான், ஜவான், ஜெயிலர், கர்டார் 2, லியோ போன்ற படங்களை தொடர்ந்து அனிமல் படமும் ரூ.600 கோடி கிளிப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.