பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
சல்மான் கான், கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி மற்றும் பலர் நடித்த 'டைகர் 3' ஹிந்திப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ம் தேதி வெளியானது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் என்ற இடத்தில் உள்ள மோகன் சினிமா என்ற தியேட்டரில் அப்படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டரின் உள்ளே பட்டாசுகளை வெடித்தும், ராக்கெட்டுகளை விட்டும் அதிர்ச்சியூட்டினார்கள். தியேட்டர் முழுவதும் தாறுமாறாக வெடிகள் வெடித்ததால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் சிதறி ஓடினார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
அது குறித்து காவல் துறை விசாரணையில் இறங்கி வழக்குப் பதிவு செய்தது. சவானி காவல் நிலையத்தில் 112 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து சல்மான் கான், “டைகர் 3' படத்தின் போது தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது, நம்மையும் பிறரையும் பணயம் வைக்காமல் படத்தை ரசிப்போம், பத்திரமாக இருங்கள்,” என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் 'லியோ' படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது விஜய் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கின் மொத்த இருக்கைகளையும் சேதப்படுத்தினார்கள். சில நாட்கள் தியேட்டர் மூடப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.