'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு |
கே.ஜி.எப் 1,2 படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் நீல் தெலுங்கில் நடிகர் பிரபாஸை வைத்து உருவாக்கி வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் இப்போது இத்திரைப்படத்திற்காக ஒரு சிறப்பு பாடல் ஒன்றை படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த பாடலுக்கு சமீபத்தில் 'கர்தார் 2' படத்தின் மூலம் பிரபலமான சிம்ரட் கவுர் நடனமாடுகிறார். நான்கு நாட்கள் இப்பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.