தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தேசிய விருது பெற்ற 'மணிகர்னிகா' படத்திற்கு பிறகு கங்கனா ரணவத்தின் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. வசூலையும் தரவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களான டாக்கெட், தலைவி, சந்திரமுகி 2, தற்போது வெளியாகி உள்ள தேஜஸ் படங்கள் போதிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. குறிப்பாக 'தேஜஸ்' படம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. போதிய கூட்டம் இன்றி பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் வெளியான 4 நாட்களில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 60 கோடியில் தயாராகி உள்ள இந்த படம் அந்த பட்ஜெட்டை மீட்காது என்று சினிமா பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கங்கனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் நாங்கள் வாழ முடியாது” என்று கூறினார்.