ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த ஜனவரி மாதம் வெளியான 'பதான்' திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து 'பேஷரங்' என்கிற பாடலில் கவர்ச்சியா உடையணிந்து நடனமாடி பரபரப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் இந்த முறை கவர்ச்சி உடை அணிந்து அல்ல காக்கி உடை அணிந்து.. ஆம் ஹிந்தியில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'சிங்கம் அகைன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் தீபிகா படுகோன்.
இந்த படத்தில் இவரது கதாபாத்திர தோற்றம் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலக பிரபலங்கள் பலரும் தீபிகாவின் இந்த புதிய அவதாரத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா, தீபிகாவின் இந்த தோற்றத்தை பார்த்து பிரமித்துப்போய் 'ஓ மை காட்' என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வியப்பை பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான 'சிங்கம், சிங்கம் ரிட்டன்ஸ்' ஆகியவற்றின் வரிசையில் இந்த 'சிங்கம் அகைன்' தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், அக்ஷய் குமார் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.