லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் இன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள படம் 'ஜவான்'. இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களை இப்படம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் வெளியாகும் ஹிந்திப் படங்கள் பெரிய அளவில் வசூலைக் குவிக்காமல் இருந்தது. 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2, புஷ்பா' ஆகிய தென்னிந்திய மொழிப் படங்களால் பாலிவுட் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அப்படி பாதிப்பில் இருந்த பாலிவுட்டை தனது 'பதான்' படம் மூலம் மீண்டும் பாதுகாத்தவர் ஷாரூக்கான். 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது அந்தப் படம். ஒரே ஆண்டில் ஷாரூக்கின் அடுத்த படமாக 'ஜவான்' படம் இன்று(செப்., 7) வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
படம் பக்கா கமர்ஷியல் என்டர்டெயினராக இருப்பதாகவும், ஷாரூக், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர். அனிருத்தின் பின்னணி இசை, அட்லியின் அதிரடியான இயக்கம் ஆகியவற்றிற்கும் பாராட்டுக்கள் குவிகிறது.
'பதான்' படம் போலவே 'ஜவான்' படமும் 1000 கோடி வசூலை அள்ளுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.