‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழில் தனுஷ் ஜோடியாக 'அனேகன்' படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்தார். ஜாக்கி சானுடன் இணைந்து 'குங்பூ யோகா' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்தார். கடைசியாக பிரபு தேவாவுடன் 'பஹீரா' படத்தில் நடித்தார். தற்போது அவர் 'பம்பாய் மேரிஜான்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
எக்செல் மீடியா மற்றும் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரித்தேஷ் சித்வானி, காசிம் ஜக்மகியா மற்றும் பர்ஹான் அக்தர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஷுஜாத் சவுதாகர் இயக்கி உள்ளார். இந்த தொடரில், அமைரா தஸ்தூருடன் கே கே மேனன், அவினாஷ் திவாரி, கிருத்திகா கம்ரா, மற்றும் நிவேதிதா பட்டாச்சார்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
10 எபிசோட்கள் கொண்ட இந்த இந்தி ஒரிஜினல் தொடர் செப்டம்பர் 14 அன்று இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும், ஆங்கிலம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும், மற்றும் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போர்த்துகீசு, ஜப்பான், போலிஷ், லத்தீன் ஸ்பானிஷ், காஸ்டிலியன் ஸ்பானிஷ், அரபிக் மற்றும் துருக்கி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
இந்த தொடர் 1960களில் மும்பை தாதாக்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. வன்முறை காட்சிகளும் நிறைந்த கிரைம் திரில்லர் தொடராக இது உருவாகி உள்ளது. தாதாக்களை ஒழிக்க போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் மகனே தாதாவாக உருவாவது போன்ற கதை அமைப்பை கொண்ட தொடர்.




