இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை 'இலியானா'. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார் இலியானா.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனதை அறிவித்தாலும் தனது காதலர்/கணவர் யார் என எந்த தகவலும் வெளியிடவில்லை. சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் மைக்கேல் டோலன் தான் தனது கணவர் என்று இலியானா தற்போது அறிவித்துள்ளார். ஏற்கனவே, தங்களுக்கு திருமணம் நடந்துவிட்டது என்றும் குழந்தைக்கு 'கோயா பீனிக்ஸ் டோலன்' என்றும் பெயரிட்டுள்ளோம் என பகிர்ந்துள்ளார்.