பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமிஷா பட்டேல் மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான ஹிந்திப் படம் 'கடார் 2'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிப்படமானது.
கடந்த 11 நாட்களில் இப்படம் 388 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 400 கோடியை நெருங்கி வருகிறது. இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த 4வது படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. நேற்றுடன் முடிவடைந்த வசூலில் அமீர்கானின் 'டங்கல்' பட வசூலையும் முறியடித்துள்ளது.
படம் வெளியான 2வது வாரத்து வசூலில் புதிய சாதனையைப் புரிந்துள்ளது 'கடார் 2'. இரண்டாவது வாரத்தில் மட்டும் இப்படம் 90 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். இதற்கு முன்பு இரண்டாவது வார வசூலில் 'பாகுபலி 2' படம் புரிந்த 80 கோடி வசூல் சாதனையை 'கடார் 2' முறியடித்துள்ளது. நேரடி ஹிந்திப் படங்களின் இரண்டாவது வார வசூலில் 73 கோடி பெற்று இதுவரையில் முதலிடத்தில் இருந்த 'டங்கல்' படத்தின் வசூலையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இப்படத்தின் வசூலும், வெற்றியும் ஹிந்தித் திரையுலகினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.