மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த மே மாதம் தி கேரள ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. அதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு கேரளா, தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் திரையிடப்பட்டது. பல மாநிலங்களில் இந்த படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அடா சர்மா நடித்திருந்தார். படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு நிறைய ரசிகர்கள் படை எடுத்தனர். அதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அதே சமயம் தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இயக்குனர் சுதிப்தோ சென் முயற்சி எடுத்து வரும் நிலையில் எந்த ஒரு ஓடிடி தளமும் இதுவரை இந்த படத்தை வாங்க முன் வரவில்லை.
குறிப்பாக இவர்கள் கேட்கும் நியாயமான தொகையை கூட அவர்கள் ஏற்க மறுத்து படத்தை வாங்க மறுக்கின்றனர் என கூறியுள்ளார் இயக்குனர் சுதிப்தோ சென். அதுமட்டுமல்ல இந்த படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே வெறுப்பையும் வன்மத்தையும் வெளிப்படுத்திய திரை உலகை சேர்ந்த பலரும் ஒரு குரூப்பாக சேர்ந்து இந்த படத்தை ஓடிடி தளத்தில் விற்பனை செய்ய விடாமல் தடுத்து எங்களுக்கு தண்டனை தர நினைக்கின்றனர்” என்று தனது விரக்தியையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.