இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
ராமாயண கதையை மையமாக வைத்து ‛ஆதிபுருஷ்' படம் தயாராகி உள்ளது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது.
சீதை வேடத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கீர்த்தி சனோன் கூறியதாவது: அசைவம் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சீதை கதாபாத்திரத்தில் சாத்வீகமாக இருப்பதற்காக அசைவம் உண்பதை படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களிலும் நிறுத்திவிட்டேன். மாடர்ன் உடைகளையே விரும்பும் நான் படப்பிடிப்பு முடியும் வரை புடவையோடுதான் காட்சியளித்தேன். தீபிகா படுகோனே, அலியா பட் போன்றோரின் போட்டிக்கு மத்தியில் இந்த கதாபாத்திரம் என் கைக்கு வந்தது.
இது போன்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொரு நடிகைக்கும் வாழ்நாளில் எப்போதாவதுதான் அரிதாக கிடைக்கும். சீதை தெய்வீகமாக எப்படி இருப்பார் என்பதை புரிந்து அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நிறைய புத்தகங்களை படித்தேன். சீதை கதாபாத்திரத்தில் நடித்த முந்தைய தலைமுறை நடிகைகளின் படங்களை பார்த்தேன். சீதை கதாபாத்திரம் தெய்வீகமாக காட்சி அளிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.