‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் பேட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நவாசுதீன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இப்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் நடித்த குளிர்பான விளம்பரம் ஒன்று சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்த விளம்பரத்தில் பெங்காலி மக்களை சோம்பேறிகள் என்று சித்தரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது பெங்காலி மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று திவ்யான் முகர்ஜி என்பவர் கோல்கட்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெங்காலி சமூக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் திட்டமிட்டு எந்த கருத்தையும் இடம்பெற செய்யவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளது.