'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மற்றும் நடிகையான பரினிதி சோப்ரா இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவும் காதலிப்பதாக ஏற்கனவே பல கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனாலும் இருவரும் இதை உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில் செய்தியாளரை சந்தித்து உள்ளார் ராகவ் சத்தா. அப்போது செய்தியாளர், 'உங்களுக்கும், நடிகை பரினிதி சோப்ராவுக்கும் இடையிலான உறவு என்ன? அவரை நீங்கள் காதலித்து வருகிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். உடனடியாக வெட்கப்பட்ட ராகவ் சத்தா, தொடர்ந்து அளித்த பேட்டியில் 'ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அந்தஸ்து குறித்து மட்டும் கேள்வி கேளுங்கள். மற்ற விஷயங்கள் குறித்து கேட்க வேண்டாம். விரைவில் அனைவருக்கும் நல்ல செய்தியை கொடுப்பேன்' என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.