வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018ம் ஆண்டு நடந்த பேரணில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சமீபத்தில் கவுதம் நவ்காலாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த விடுதலை உத்தரவை பலரும் விமர்சித்தனர். காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் பிரபலமான டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியும் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து கருத்து பதிவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அதை ஏற்காத நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு எதிராக வெளியிட்ட பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.