ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தலா. அதை தொடர்ந்து கன்னட, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஊர்வசி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கிசுகிசு வெளியானது. ஆனால் அது குறித்து எந்த செய்தியும் உறுதி ஆகவில்லை.
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார் ஊர்வசி. இதைதொடர்ந்து நசீம் ஷாவும் ஊர்வசியும் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரையும் நசீமையும் உள்ளடக்கி ரசிகர் உருவாக்கிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து ஊடகங்கள் எந்தவிதமான செய்திகளையும் உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஊர்வசியின் இந்த பதிவினால் ரசிகர்கள் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லையா என குழப்பத்தில் உள்ளனர்.