100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கு இன்னமும் முன்னணி நடிகைகள் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. ஆனாலும், அவரை தெலுங்கு, தமிழில் நடிக்க வைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்தார்கள். கடைசியாக ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30வது படத்தில் ஜான்வியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
இப்படத்திற்காக ஜான்விக்கு சம்பளமாக 5 கோடி வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகைகளின் சம்பளமாக அதிகபட்சமாக 3 கோடி தான் உள்ளது. ஹிந்தியில் இன்னும் முன்னணி நடிகையாக உயராத ஜான்விக்கு 5 கோடி சம்பளம் அதிகம்தான் என்கிறார்கள். அதற்கு உதாரணமாக கியாரா அத்வானிக்கு 'ஆர்சி 15' படத்தில் 4 கோடியை வழங்கியதைச் சொல்கிறார்கள். முன்னணி நடிகையான அவருக்கே 4 கோடி எனும் போது ஜான்விக்கு 5 கோடி அதிகமே என்பதுதான் டோலிவுட் கருத்தாக உள்ளது.
அதே சமயம் 'புராஜக்ட் கே' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனேக்கு 10 கோடிக்கும் அதிகமான சம்பளம் தந்துள்ளார்களாம்.