Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு : நலமுடன் இருப்பதாக அறிவிப்பு

02 மார், 2023 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Actress-Sushmita-Sen-suffered-a-heart-attack

ஐதராபாத் : 'எனக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் தற்போது நலமாக இருக்கிறேன்' என, பிரபல நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

1994ல் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் பெற்றவர் பிரபல ஹிந்தி நடிகையான சுஷ்மிதா சென். தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். பல்வேறு 'டிவி' நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ள இவர், யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துள்ளார். தற்போது, தெலுங்கானாவின் ஐதராபாத்தில் வசித்து வரும் சுஷ்மிதாவுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில், தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சுஷ்மிதா கூறியுள்ளதாவது: உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும், பலமாகவும் வைத்திருங்கள். உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும். இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு, 'ஆஞ்சியோபிளாஸ்டி' செய்யப்பட்டு, 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது என்பதை என் இதய நோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார். சரியான நேரத்தில் உதவியதுடன், ஆக்கப்பூர்வமான உதவிகள் வழங்கியவர்களுக்கு மற்றொரு பதிவில் நன்றி தெரிவிப்பேன். எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் என் வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமிதாப்பச்சன், தர்மேந்திரா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்அமிதாப்பச்சன், தர்மேந்திரா ... ஷாருக்கான் மனைவி மீது எப்ஐஆர் பதிவு ஷாருக்கான் மனைவி மீது எப்ஐஆர் பதிவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)