மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி | தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ் | விமர்சனத்திற்கு பணம் கேட்பதா ? கேரளாவிலும் இயக்குனர் கிளப்பிய சர்ச்சை.. போலீஸிலும் புகார் | மம்முட்டியை தொடர்ந்து தனது வீட்டையும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்ட மோகன்லால் | திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா |
2013ம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ஹிந்தி படம் ராஞ்சனா. இதில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். இரண்டாவது நாயகியாக ஸ்வரா பாஸ்கர் நடித்தார். ஹிந்தி படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். அதோடு அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரான பகத் அகமது என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார் ஸ்வரா பாஸ்கர். இவர் சமாஜ்வாதி கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். அவர்களின் திருமணம் எளிமையான முறையில் பதிவுத் திருமணமாக நடைபெற்றுள்ளது. அதோடு விரைவில் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
நடிகை ஸ்வரா பாஸ்கர் - பகத் அஹமதுவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.