மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான அல வைகுந்தபுரம்லோ படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்ததுடன் அதில் புட்டபொம்மா என்கிற ஹிட் பாடலுக்கு ஆடியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பூஜா ஹெக்டே. ஆனால் இந்த வருடம் பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த படங்கள் எல்லாமே வரிசையாக தோல்வியை தழுவின. இந்த நிலையில் ஹிந்தியில் அவர் நடித்துள்ள ‛சர்க்கஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த வருடத்தில் எப்படியும் ஒரு வெற்றியை இந்தப்படத்தின் மூலமாக பெற்றுவிட வேண்டும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் பூஜா ஹெக்டே.
ஹிந்தி திரையுலகம் ஒன்றும் அவருக்கு புதிதல்ல. ஏற்கனவே மொகஞ்சதாரோ, மற்றும் ஹவுஸ்புல்-4 ஆகிய படங்களில் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்த சர்க்கஸ் படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க, இன்னொரு கதாநாயகியாக ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே பேசும்போது, “இந்த வருடம் பாலிவுட் சினிமா மிகப்பெரிய அளவில் வெற்றிகளை பார்க்காமல் ரொம்பவே தளர்ந்து போய் தான் உள்ளது. அதற்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக இந்த சர்க்கஸ் படத்தின் வெற்றி அமையும்” என்று கூறியுள்ளார்.