பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

கத்தாரில் தற்போது பிபா கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா பதேஹி என்பவர் நடனமாடினார். அந்த நடனத்தின்போது தன்னிடம் இருந்த இந்திய தேசியக்கொடியை இரண்டு கைகளிலும் பிடித்து பறக்கவிட்டபடி உற்சாகமாக ஜெய்ஹிந்த் என்றும் கத்தினார். இவரது இந்த செயலுக்கு பலரிடமிருந்து வரவேற்பு கிடைத்தாலும் இந்த நிகழ்வில் அவர் எதிர்பாராமல் செய்த ஒரு விஷயம் தற்போது அவருக்கு எதிராக திரும்பி சர்ச்சையை கிளப்பிவிட்டது.
அதாவது இந்த நடனத்தின் போது அவர் நமது தேசியக்கொடியை தலைகீழாக காட்டினார். அதுமட்டுமல்ல அவர் அந்த தேசிய கொடியை வாங்கியபோது கீழே இருந் ஒருவர் அதை தூக்கிப்போட நோரா பதேஹி அதை பிடிப்பதற்குள் கீழே விழுந்தது. இவற்றை குறிப்பிட்டு பலரும் நோரா பதேஹி, நமது தேசியக்கொடியை அவமதித்து விட்டார் என கூறி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதேசமயம் அந்த கொடியை அவர் முதலில் நேராக பிடித்திருந்ததும் கொடியை சுழற்றியபோது அவரை அறியாமலேயே அது தலைகீழாக மாறியதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இதை பதிவிட்டுள்ள சிலர் நோரா பதேஹிக்கு உள்ள தேசிய உணர்வை மட்டுமே நாம் கருத்தில் கொண்டு அவரை பாராட்ட வேண்டுமே தவிர, அந்த விழா மேடையில் ஏதோ ஒரு பதட்டத்தில் அவர் தன்னையறியாமல் தவறுதலாக செய்த ஒரு விஷயத்தை பூதாகரப்படுத்தி அவரை அவமதிக்க கூடாது என்று ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.