ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் | பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் |
தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற படமான 'விக்ரம் வேதா' அதே இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்க ஹிந்தியில், ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்க ரீமேக் ஆகி கடந்த வாரம் வெளியானது.
படத்தைப் பார்த்த பல விமர்சகர்களும் படத்தை ஆஹா, ஓஹோவெனப் பாராட்டினார். 5க்கு 4 ரேட்டிங் எல்லாம் கொடுத்தார்கள். ஆனாலும், படத்தின் வசூல் விமர்சனங்களின் பாராட்டுக்களுக்கு ஏற்றபடி அமையாதது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வார இறுதியில் இப்படம் சுமார் 40 கோடி வரை வசூலித்துள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 11 கோடி, இரண்டாம் நாளில் 13 கோடி, மூன்றாம் நாளில் 15 கோடி வரை வசூலித்துள்ளதாம். இவ்வளவு குறைவான வசூல் இப்படத்திற்குக் கிடைக்கும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். நவராத்திரி பூஜையால் குடும்பத்தினர் தியேட்டர்கள் பக்கம் வராமல் இருப்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.