நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
பாலிவுட்டில் இயக்குனராக, தயாரிப்பாளராக வலம் வருபவர் கரண் ஜோஹர். கல்யாண வீடுகளில் தவறாமல் வாழை மரம் கட்டுவது போல பாலிவுட்டின் முக்கிய சினிமா நிகழ்வுகள் அனைத்திலும் தவறாமல் இடம் பெற்று வருபவர் தான் கரண் ஜோஹர். அதுமட்டுமல்ல மிகப்பெரிய படங்கள் வெளியாகும்போது இவர் நடத்தி வரும் காபி வித் கரண் என்கிற நிகழ்ச்சியில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் தவறாமல் கலந்து கொள்வதும் வழக்கம்.
இந்த நிலையில் காபி வித் கரண் சீசன்-7 நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கரண் ஜோஹர், “சமீபத்தில் விக்கி கவுஷல், கத்ரினா கைப் திருமணம் நடைபெற்றபோது எனக்கு அழைப்பு அனுப்பவில்லை.. சமீப காலமாகவே பாலிவுட்டில் நடைபெறும் சில திருமண நிகழ்வுகளில் எனக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை. இதோ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் கூட அதுபற்றி இங்கே எதையும் பேசவில்லை” என அங்கே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சில நட்சத்திரங்களைப் பார்த்து தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார் கரண் ஜோஹர். மேலும் இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பவில்லை என்பதை கேட்ட பின்னரே என் மனம் கொஞ்சம் அமைதியானது என்றும் கூறியுள்ளார் கரண் ஜோஹர்.