ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கானுக்கு இளம் வயதில் ஆர்யன் கான் என்ற மகன், சுஹானா என்ற மகள் மற்றும் அப்ராம் என்ற இளைய மகனும் இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும் ஒரே புகைப்படத்தில் பார்ப்பது அரிது. ஷாரூக்கானின் மூத்த மகனான ஆர்யன் கான் தனது தங்கை சுஹானா, தம்பி அப்ராம் ஆகியோருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை 'ஹாட்ரிக்' என்ற தலைப்பிலும், கூடவே தம்பி அப்ராம் உடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
ஷாரூக்கான் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஆர்யன். ஷாரூக் மகள் சுஹானா ஒரு கதாநாயகிக்குரிய தோற்றத்தில் இருக்கிறார். கடைக்குட்டி அப்ராம் க்யுட்டான சிறுவனாக இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் லைக் செய்து கமெண்ட் செய்துள்ளனர்.
“இந்தப் புகைப்படங்கள் ஏன் என்னிடம் இல்லை, உடனடியாக இதை என்னிடம் கொடுங்கள்,” என ஷாரூக்கான் கமெண்ட் செய்துள்ளார். ஷாரூக்கின் வாரிசுகளை அடுத்தடுத்து சினிமாவில் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.