ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சமீபகாலமாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், பெல்பாட்டம், ரக்ஷா பந்தன் உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள கட்புட்லி படம் வெளிவர இருக்கிறது. இது தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்.
இந்த நிலையில் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷய் குமாரிடம் தொடர் தோல்விகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த உருக்கமான பதில் வருமாறு: எனது படங்களின் தோல்வியை நான் உற்று கவனிக்கிறேன். அதற்கான காரணத்தை ஆராய்கிறேன். இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். என் படங்கள் போதிய வரவேற்பை பெறாததற்கு நாங்கள் தான் காரணம், குறிப்பாக நான் தான் காரணம். நான் உடனே சில மாற்றங்களை செய்ய வேண்டும், பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான தோல்விகளுக்கு என்னைத் தவிர வேறு யாரை பொறுப்பாக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு அக்ஷய் குமார் கூறியிருக்கிறார்.