100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
புகழ்பெற்ற திரைப்படமான தி லார்ட் ஆப் ரிங் 3 பாகங்களாக வெளிவந்துள்ளது. இதன் 4வது பாகம் தி ரிங்ஸ் ஆப் பவர் என்ற பெயரில் வெப் தொடராக தயாராகி உள்ளது. இந்த தொடர் ஓடிடியில் வெளியாகிறது. இதை தொடர்ந்து இதனை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மும்பையில் இதன் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. இதில் தொடரில் நடித்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஒரு படத்தின் புரமோசனுக்காக இத்தனை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மொத்தமாக கலந்து கொண்டது இப்போதுதான் என்கிறார்கள். தொடர் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகிறது.
பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெயின், தொடரில் நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென், மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த், தைரோ முஹாப்தீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.