சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பாலிவுட் நடிகர் சல்மான்கானையும் அவரது தந்தை சலீம்கானையும் கொல்வோம் என்று ஒரு கும்பல் சலீம்கானுக்கு மிரட்டல் கடிதம் கொடுத்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது. சல்மான்கானுக்கும், அவரது தந்தைக்கும், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சல்மான்கானிடமும், சலீம் கானிடமும் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர். தங்களை கொலை செய்ய முயற்சிப்பது யார் என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கொலை செய்யும் அளவிற்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும் அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் பாடகர் சித்துவை கொன்றது நாங்கள் தான் என்று தற்போது சிறையில் இருக்கும் பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருந்தார். தற்போது சல்மான் கொலை மிரட்டலுக்கும் அவர் காரணமாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த தேடலில லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் சிலர் போலீசிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சல்மான்கானை கொல்ல நாங்கள்தான் திட்டமிட்டோம், இதற்காக 4 லட்சம் ரூபாய் கொடுத்து நவீன துப்பாக்கியும் வாங்கினோம் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.