ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்பால் யாதவ், ‛அர்த்' என்ற படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பலாஷ் முச்சல் இயக்கியுள்ளார். ராஜ்பால் உடன் ரூபினா திலக், ஹிட்டன் தேஜ்வானி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஓடிடி தளத்தில் வருகிற 10ம் தேதி வெளியாகிறது.
திருநங்கையாக நடித்திருப்பது குறித்து ராஜ்பால் கூறியதாவது: மும்பையில் வாழும் ஒரு திருநங்கையின் வாழ்க்கைதான் படம். ஒரு பாலின மாற்றம் ஒரு மனிதனை எப்படி புரட்டிப்போடுகிறது என்பது கதை. இந்த படத்தில் நிஜமான திருநங்கையை நடிக்க வைத்திருக்கலாமே... நீங்கள் ஏன் நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விவசாயின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கப்பட்டால், உண்மையான விவசாயி படத்தில் நடிக்க மாட்டார். அதேபோல், 'அர்த்' படத்தில் நான் திருநங்கையாக நடிக்கிறேன், அதே நேரத்தில் ஒரு தந்தையாகவும், கணவனாகவும் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் முக்கியமாக பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படுகிறது, ஆனால் ஒரு நடிகரால் மட்டுமே ஒரு கதாபாத்திரத்தின் பல அடுக்குகளுக்கு நியாயம் செய்ய முடியும் என்று நான் உணர்கிறே என்கிறார் ராஜ்பால்.