நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
படங்கள் வெற்றி பெறும்போது கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது விமர்சிப்பதும் சினிமாவில் சர்வசாதாரணம். குயின், மணிகர்னிகா படத்தில் தேசிய விருது பெற்றபோது கொண்டாடப்பட்ட கங்கனா ரணவத் தற்போது தக்காட் படத்தின் தோல்வியால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார், கிண்டல் செய்யப்படுகிறார்.
படத்தை பற்றியோ, படத்தில் கங்கனாவின் நடிப்பு பற்றியோ வரும் விமர்சனங்களை விட அவருக்கு வாய்கொழுப்பு, பாரதிய ஜனதா கட்சியின் ஊதுகுழல், அவருக்கு நல்லா வேண்டும் என்பது மாதிரியான விமர்சனங்களே அதிகம் வருகிறது. இத்தனைக்கும் தக்காட் மோசமான படம் அல்ல. ஹாலிவுட் பாணியிலான ஒரு ஆக்ஷன் மூவி. இந்த தோல்வி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது: தக்காட் படம் பற்றி நிறைய எதிர்மறை கருத்துகள், விமர்சனங்கள் வருகிறது, இது எனக்கு கவலையளிக்கிறது. அதே நேரத்தில் ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தை நான் தான் இயக்கி நடித்தேன். அந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. அப்போது யாரும் அதை இந்த அளவிற்கு பாராட்ட வில்லை.
இந்த ஆண்டில் என் மீது எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தாலும் இதே ஆண்டில்தான் லாக்அப் என்ற வெற்றிகரமான டிவி நிகழ்ச்சியை நடத்தி காட்டியிருக்கிறேன் என்பதை மறந்து விட்டார்கள். இந்த வருடம் இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் 6 மாதங்கள் பாக்கி உள்ளன. மீண்டும் ஒரு வெற்றியுடன் இந்த ஆண்டில் எனது முத்திரையை பதிப்பேன்.
இவ்வாறு கங்கனா கூறினார்.